முந்தைய கட்டணம் செலுத்த அறிவுரை
திண்டுக்கல்; மின்வாரிய செய்தி குறிப்பு : திண்டுக்கல் தெற்கு பொன்னகரம் மின் அலுவலகத்திற்கு உட்பட்ட நல்லாம்பட்டி, சிறுமலை மின் பகிர்மானங்களில் மின் கணக்கீடு பணியாளர் உடல் நலக்குறைவால் விடுப்பில் உள்ளதால் ஆகஸ்ட் மின் கணக்கீட்டு பணி செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே நல்லாம்பட்டி, சிறுமலை பகிர்மானங்களில் உள்ள மின் நுகர்வோர்கள் முந்தைய மாத மின் கணக்கீட்டு தொகையை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாற்றங்கள் இருப்பின் அடுத்த கணக்கீட்டில் சரிசெய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.