காந்திகிராமத்தில் விவசாய கண்காட்சி
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலை இறுதியாண்டு வேளாண் துறை மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தில் 90 நாட்கள் கிராமங்களில் விவசாயிகளோடு தங்கினர். அனுபவ பயிற்சி குறித்த விவசாய கண்காட்சி காந்தி கிராம பல்கலையில் நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தொடங்கி வைத்து பேசுகையில், '' விவசாயத்தை இளைய தலைமுறையினர் முக்கியத்துறையாக ஏற்க வேண்டும். நவீன அறிவியலை பயன்படுத்தி புதிய தொழில்நுட்பத்தை விவசாயத்திலும் புகுத்தி இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உற்பத்தியை பெருக்க வேண்டும் ''என்றார். பல்கலை பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வேளாண்மை கால்நடை துறை முதல்வர் சுந்தரமாரி, பேராசிரியர்கள் பிரியங்கா, ராஜகுரு, பபிதா பங்கேற்றனர்.