அ.தி.மு.க.,-- பா.ஜ., கூட்டணிக்கு கருவே இல்லை: முத்தரசன்
திண்டுக்கல்,:''அ.தி.மு.க., - பா.ஜ.,கூட்டணிக்கு கருவே உருவாகவில்லை. பழனிசாமியை முதல்வராக கூட ஏற்கவில்லை'' என இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்,திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது :திண்டுக்கல்லில் கம்யூ., கட்சியினர் மீதான தாக்குதல் நாகரீகம் அல்ல. பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., வன்முறையில் ஈடுபடக்கூடிய அமைப்பு. அ.தி.மு.க.,வை உருட்டி மிரட்டி பா.ஜ., பணிய வைத்துள்ளது. இவர்கள் கூட்டணிக்கு கருவே உருவாகவில்லை. பழனிசாமியை முதல்வராக கூட மத்திய அமைச்சர் அமித்ஷா ஏற்கவில்லை. தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி இல்லை. ஆட்சியில் பங்கு என அமித்ஷா சொல்கிறார். இதற்கு அ.தி.மு.க.,வின் கருத்து என்னவோ தெரியவில்லை. முருகன் மாநாட்டில் அரசியல் பேசியது எல்லோருக்கும் தெரியும். ஈ.வெ.ரா., அண்ணாதுரை அவமானப்படுத்தப்பட்டனர். இதுகுறித்து கேட்டால் அமித்ஷா இரட்டை வேடம் போடுகிறார். ஆர்.எஸ்.எஸ்., அரசியல் பிரிவுதான் பா.ஜ., அதற்கு பல கோர முகம் உண்டு. அ.தி.மு.க.,க்குள் போட்டி கட்சிகளை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.,வில் யார் தலைவர் என தெரியவில்லை. பல தலைவர்கள் இருக்கிறார்கள் என்றார்.