உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம் 

அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம் 

திண்டுக்கல் : திண்டுக்கல் சட்டசபை தொகுதி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பள்ளபட்டி, குரும்பபட்டி, செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதிகளுக்கான பூத் கமிட்டி அமைப்பது, இளைஞர் இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்கள் சேர்ப்பது, இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சீனிவாசன் ஆலோசனை வழங்கினார். அமைப்பு செயலாளர்கள் ஆசைமணி, மருதராஜ், அவைத்தலைவர் சங்கரநாராயணன், செயலாளர் முத்துசாமி, அம்மா பேரவை துணை செயலாளர் பிரபு, ஒன்றிய அவைத்தலைவர் நந்தகோபால், செயலாளர் நாகராஜ், கிளை செயலாளர்கள் முருகன், கிருஷ்ணன், சந்திரகாசன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை