உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அ.தி.மு.க., ஆலோசனைக்கூட்டம்

 அ.தி.மு.க., ஆலோசனைக்கூட்டம்

திண்டுக்கல்: அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,பரமசிவம், முன்னாள் மேயர் மருதராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பாரதிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்,'' புதிதாக வாக்காளர்களை சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய ஜன. 18- வரை விண்ணப்பிக்கலாம் . கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பூத் வாரியாக பட்டியலை சரிபார்க்க வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்கும் வகையில் படிவம்-6 ஐ வீடு தோறும் வழங்க வேண்டும். பணிகள் முடிந்த பிறகு 2026 தேர்தலுக்கான களப்பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் ''என்றார். பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, வி.டி.ராஜன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ராஜேஷ்கண்ணா மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ