உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க., கபடி போட்டி

அ.தி.மு.க., கபடி போட்டி

நத்தம்: நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நத்தம் நகர அ.தி.மு.க., சார்பாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பிறந்த நாளை முன்னிட்டு பெண்கள்,ஆண்களுக்கான கபடி போட்டிகள் நடந்தது. ஜெ. பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் தொடங்கி வைத்தார். பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து 30 -க்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. மாவட்ட ஜெ. பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் அமர்நாத், நகர அவைத்தலைவர் சேக்ஒலி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கண்ணன், ஆண்டிச்சாமி, சவரிமுத்து, தகவல் தொழில்நுட்பஅணி மதுரை மண்டல செயலாளர் தினேஷ்குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ