உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சின்னாளபட்டி : சின்னாளபட்டி தேவாங்கர் மேல்நிலைப் பள்ளியில் 1974ல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. தலைமை ஆசிரியர் ஞானசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் தொழில்துறை சாதனையாளர் அழகர்சாமி, ஒய்வு பேராசிரியர் பிரான்சிஸ் ஜோசப் ராகவன், திருச்சி செல்வராஜ் முன்னிலை வகித்தனர். நீதித்துறை நிர்வாக அதிகாரி தங்கப்பாண்டியன் வரவேற்றார்.ஆசிரியர்கள் சொக்கையன், சுப்பையா, ரங்கநாதன், முருகேசன், ஜேம்ஸ், வீரராகவன், துரைராஜ், வாசுதேவன் பேசினர். மேசை, நாற்காலிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர்ஒருங்கிணைப்பாளர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ