மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
14-Aug-2025
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 135 ஆண்டுகள் பழமையான நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 1961 --1967ல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் சண்முகசுந்தரம், வினோபாஜி வரவேற்றனர். சங்கப் பிரதிநிதிகள் முகமதுயூசுப், இளங்கோவன் முன்னாள் மாணவர்கள் சார்பாக ரூ.60ஆயிரம் மதிப்புள்ள ஒலிப்பெருக்கி சாதனங்களை தலைமை ஆசிரியையிடம் வழங்கினர். தொடர்ந்து 2024--2025 ல் 10, 12ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கேடயம், ரொக்கப்பரிசு, புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ராஜேந்திரன், ராமதாஸ் ஒருங்கிணைத்தனர்.
14-Aug-2025