மேலும் செய்திகள்
அம்மன் கோயில்களில் பவுர்ணமி வழிபாடு
07-Oct-2025
திண்டுக்கல்: அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன. திண்டுக்கல் மலையடிவாரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெற்றன. ஓதசுவாமிகள் கோயிலில் சுவாமி சேஷவாகனத்தில் பவனி வந்து பக்தர் களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் பூஜைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மலையடிவார பத்திரகாளியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் யாகம் நடந்தது. அபிராமி அம்மன் கோயில், கோட்டைமாரியம்மன் உட்பட முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திண்டுக்கல் என்.ஜி.ஓ.,காலனி முனீஸ்வரன் கோயிலிலும் அமாவாசை யாக பூஜை நடந்தது. நீர்நிலைகளில் முன்னோர்களை நினைத்து வழிபாடும் நடந்தது. கோபாலசமுத்திர குளத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த ஏராளமான மக்கள் வாழைக்காய், பச்சரிசியுடன் படையல் படைத்து முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர்.
07-Oct-2025