ஒட்டன்சத்திரம் கலைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் இதிகாச நிகழ்வை கூறும் இராமாயண நாடகம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஆப்பரேஷன் சிந்தூர் நடன நாடகம், சிவன், பார்வதி பரதநாட்டியம் முதலிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கி கலை விழாவாக ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த ஆண்டு விழாவானது இருந்தது. இத்துடன் மழலையர் பட்டமளிப்பு க்ஷவிழாவும் நடந்தது. மேலும், நீட், ஜே.இ.இ., தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று முதன்மையான மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயின்று வரும் 120க்கும் மேற்பட்ட மாணவர்களை சிறப்பிக்கும் வகையில் முதல் பரிசாக ரூ.1 லட்சம் முதல் காசோலை, நினைவு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக கலெக்டர் சரவணன், முன்னாள் மாணவரான மதிய உணவு பாதுகாப்பு அதிகாரி எம்.ரவின், முன்னாள் மாணவி டாக்டர் பிரியங்கா கலந்து கொண்டனர். மாணவர்களை ஊக்குவித்த விழா பட்டாபிராமன், பள்ளி செயலாளர்: ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளில் தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்திய விதம் அருமையாக இருந்தது. கல்வி ஒழுக்கம் கலை விளையாட்டு மற்றும் நீட்., ஜே .இ .இ., ஐ .ஐ. டி., போன்ற நுழைவு மற்றும் போட்டித் தேர்வுகளில் மாணவர்களை வெற்றி பெற செய்தலே எங்களின் நோக்கம். பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பணியினை முதன்மையாக கருதிட்டு கூட்டு முயற்சியில் உழைத்து ஒவ்வொரு துறையிலும் மாணவர்கள் மாநில அளவில் வெற்றி பெற்று முன்னணி நிறுவனங்களில் தங்களுக்கு என தனி அங்கீகாரத்தை பெற்றிருப்பது பெருமையாக உள்ளது. கல்வி, கலை திறன் மேம்படுத்தும் விழா சவும்யா, பள்ளி முதல்வர் : மாணவர்களே நல்ல சமுதாயத்தை உருவாக்கிட முடியும் என்ற எண்ணத்தில் கல்வி, கலைத்திறனையும் மேம்படுத்தும் வகையில் பள்ளியின் 23 வது ஆண்டு விழா அமைந்துள்ளது. மாணவர்களின் வாழ்க்கை சூழலை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தனித்துவ முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறப்பு வகுப்புகள், மாத, திருப்புதல் தேர்வுகள் நடத்தி மாணவர்களின் கற்றலை சீராக்குகின்றோம். விளையாட்டு, நடனம், இசைக்கருவி பயிற்சி, பாடல் வகுப்பு, ஓவியம், நாடகம், சதுரங்கம், கேரம், பேட்மிட்டன், ஸ்கேட்டிங் என மற்ற துறைகளுக்கும் தனித்தனி பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துகிறோம். புதுமைகள் இனியா, மாணவி : ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அழகுற அமைந்திருந்தது. நான் கடந்த 12 ஆண்டுகளாகி பள்ளியில் படித்து வருகின்றேன். ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு விழாக்களில் புதுமைகளை புகுத்தி காண்போரை அசத்துகிறது. என் ஐயங்களை நீக்கி வழிபிறலாமல் நெறிப்படுத்தி 12ம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, கலைகளிலும் என்னை வளர்த்திட்ட இப்பள்ளியின் மாணவி நான் என்பதை கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கலை நிகழ்ச்சிகள் அருமை டாக்டர் சுதர்சன், பெற்றோர்: இப்பள்ளி ஆண்டு விழாவில் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசித்துப் பார்க்கும்படி அருமையாக இருந்தது. குழு நடனங்கள் சிறப்புற அமைந்திருந்தது. நவீன வசதி கொண்ட வகுப்பறைகள் குழு செயல்பாடுகள் இன்றைய கல்வி நிலைக்கு ஏற்ப கணிப்பொறி ஆய்வகம், விளையாட்டு அரங்கம், சிறப்பு பயிற்சியாளர்கள், சிறந்த சுற்றுச்சூழல் வசதி , பேருந்து வசதி, அலுவலகம், பயிற்சி வகுப்புகள் என இவை அனைத்தும் ஒரே இடத்தில் அமையப்பெற்று விளங்குவதால் கல்வியிலும், விளையாட்டிலும் சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். பயிற்சி வகுப்புகளால் தன்னம்பிக்கை ஞான சரண்யா (பெற்றோர்) பேராசிரியர் காந்திகிராம பல்கலை, திண்டுக்கல்: ஆண்டு விழாவில் குழந்தைகள் பங்கேற்று ஆடிய நடனங்கள் பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. சிவன், பார்வதி நடனம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. பள்ளியில் இடைநிலை வகுப்புகளில் இருந்தே மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் மற்றும் அறிவியல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதால் நுழைவுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்கின்றனர்.