உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரம் வந்த ஆந்திரா பச்சை மிளகாய்

ஒட்டன்சத்திரம் வந்த ஆந்திரா பச்சை மிளகாய்

ஒட்டன்சத்திரம்: உள்ளுர் வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு ஆந்திரா பச்சை மிளகாய் வர கிலோ ரூ.28க்கு விற்பனையானது.திண்டுக்கல், திருச்சி, தேனி, அரியலுார், பெரம்பலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் விளைந்த பச்சை மிளகாய் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தொடர் மழை காரணமாக நோய் தாக்குதலுக்கு உள்ளாகி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தரம் குறைந்த பச்சை மிளகாய் வரத்து அதிகமாக இருந்தது. இவற்றை வியாபாரிகள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஒரு கிலோ ரூ. 18 முதல் ரூ. 20 வரை மட்டுமே விற்றது. தற்போது ஆந்திராவில் மிளகாய் அறுவடை சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதனால் அங்கிருந்து லாரிகள் மூலம் ஒட்டன்சத்திரத்துக்கு பச்சை மிளகாய் விற்பனைக்கு வருகிறது. ஆந்திரா மிளகாய் தரமாக இருப்பதால் உள்ளூர் மிளகாயை காட்டிலும் அதிக விலைக்கு விற்பனையாகிறது. ஆந்திரா சம்பா மிளகாய் கிலோ ரூ. 28 , உருண்டை மிளகாய் ரூ.26க்கு விற்பனை ஆனது.இனி வரும் நாட்களில் பச்சை மிளகாய் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ