உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரத்த சோகை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

ரத்த சோகை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் திருப்பதி அருள்நெறி மேல்நிலைப் பள்ளியில்நாட்டு நலப்பணி திட்ட மாணவிகளுக்கான ரத்த சோகை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், விழிப்புணர்வு வினாடி வினா போட்டிகள் நடந்தது.தலைமை ஆசிரியர் குப்பமுத்து தலைமை வகித்தார்.நாட்டு நலப்பணித் திட்ட மாநில உதவி தொடர்பு அலுவலர் சவுந்தரராஜ் முன்னிலை வகித்தார்.அலுவலர் சேகர் வரவேற்றார். இந்திய மருத்துவ கழக ஒட்டன்சத்திரம் கிளைச் செயலாளர் ஆசைத்தம்பிபரிசு வழங்கினார்.அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் காவ்யா, சித்தா மருத்துவர் பொன்னரசு,கண் மருத்துவர் சிவசெல்வி, முன்னாள் கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் டேனியல்பங்கேற்றனர்.ஏற்பாடுகளை நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் தமிழ்செல்வன், கார்த்திக், சரவணகுமார், மகேஸ்வரி செய்தனர். என்.எஸ்.எஸ்.,உதவி திட்ட அலுவலர் சக்திவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை