உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  முத்தாலம்மன் கோயில் வருடாபிஷேகம்

 முத்தாலம்மன் கோயில் வருடாபிஷேகம்

நத்தம்: நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சி பூசாரிபட்டியில் முத்தாலம்மன் கோயிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து நேற்று காலையில் வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு சிவச்சார்யார்களின் வேத மந்திரங்கள் முழங்க அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, பூர்ணாகுதி தீபாராதனைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், மஹா தீபாராதனைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை