உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை கூட்டுறவு வங்கியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் பறிமுதல்

கொடை கூட்டுறவு வங்கியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் பறிமுதல்

கொடைக்கானல்:கொடைக்கானல் மன்னவனுார் கூட்டுறவு வங்கியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய, விடிய நடத்திய சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 4 ஆயிரத்து 10 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கொடைக்கானல் மேல்மலை பகுதியான போளூர், மன்னவனுார் கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த வரும் கூட்டுறவு வங்கி உயர் அதிகாரிகளை சரி கட்ட போளூர், மன்னவனுார் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் லஞ்சம் கொடுக்க தயாராக உள்ளதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி டி.எஸ்.பி., நாகராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் நேற்று காலை வரை சோதனை நடத்தினர். வங்கியில் பணியாற்றும் கோபாலகிருஷ்ணன், ராமசாமி, பிச்சைமணி, கருணாநிதி உள்ளிட்டோரிடம் இருந்த கணக்கில் வராத 2 லட்சத்து 4 ஆயிரத்து 10 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக கூட்டுறவு வங்கி உயரதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை