உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை தேவை

லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை தேவை

வடமதுரை; வடமதுரை பத்திரப் பதிவு அலுவலக லஞ்ச பிரச்னைகள் மீது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.இங்கு 13 ஆண்டுகளாக நிரந்தரமாக சார்பதிவாளர் இல்லாமல் வெவ்வேறு ஊர்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் பதவி அளவிலானவர்களே மாற்று பணியாக வருகின்றனர். 7 நாட்களில் தர வேண்டிய மேனுவல் வில்லங்க சான்று ஆண்டுகணக்கில் வழங்கப்படாமல் இடித்தடிக்கப்படும் நிலை உள்ளது. ஊழியர்கள் அதிக தாமதமாக பணிக்கு வருவது, லஞ்சம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு உயரதிகாரிகளுக்கு மனு தந்தும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் இங்கு பாதிக்கப்பட்டோர் போஸ்டர்கள் மூலம் தங்கள் சிரமத்தை நுாதன முறையில் வெளிப்படுத்துகின்றனர். நேற்று தமிழக மக்கள் சக்தி இயக்கம், 28 கிராம பொதுமக்கள் பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டரில், வடமதுரை பதிவு அலுவலக லஞ்ச பிரச்னைகளுக்கு பதிவுத்துறை போல துாங்காமல் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ