மேலும் செய்திகள்
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
10-Dec-2025
ஒட்டன்சத்திரம்: பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணி திட்டம் மற்றும் போதை பொருள் எதிர்ப்பு அமைப்பு சார்பில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை, மனநலம் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் வாசுகி தலைமை வகித்தார். மாவட்ட வள பயிற்றுநர்கள் ஊர்சல் அருள் ராணி, திலகவதி மாணவிகளுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை கூறினர். மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
10-Dec-2025