உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 480 வீடுகளுடன் அடுக்கு மாடி கட்டடம் அமைச்சர் சக்கரபாணி தகவல்

480 வீடுகளுடன் அடுக்கு மாடி கட்டடம் அமைச்சர் சக்கரபாணி தகவல்

ஒட்டன்சத்திரம் : ''ஒட்டன்சத்திரத்தில் 480 வீடுகளுடன் கூடிய அடுக்கு மாடி கட்டடம் கட்ட முதல்வர் அனுமதி அளித்துள்ளார,'' என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் ரூ.10.78 கோடியில் பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால், சிறுபாலம், தார் சாலை, சுற்றுச்சுவர் அமைக்கும் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி பேசியதாவது:ஒட்டன்சத்திரத்தில் 480 வீடுகளுடன் கூடிய அடுக்குமாடி கட்டிடம், கீரனுாரில் 430 வீடு கட்டுவதற்கும் முதல்வர் அனுமதி வழங்கி உள்ளார். காளாஞ்சிபட்டியில் ரூ 10.15 கோடியில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை முதல்வர் விரைவில் திறந்து வைக்க உள்ளார். இதுவரை 440 கோடி பெண்கள் கட்டணமில்லா பஸ் பயணத் திட்டத்தில் பயனடைந்துள்ளனர். விபத்தில் சிக்கி தனியார் மருத்துவமனைக்கு சென்றால் முதற்கட்ட சிகிச்சைக்காக வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் உயர்த்தப்பட்டு ரூ. 2 லட்சமாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார் என்றார்.திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி முன்னிலை வகித்தார். தாசில்தார் சசி, வட்ட வழங்கல் அலுவலர் பிரசன்னா, நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சி பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, மாவட்ட அவைத் தலைவர் மோகன், செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் பாலு, நகர அவைத்தலைவர் சோமசுந்தரம் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ