மேலும் செய்திகள்
சைக்கிள் கடையில் தீ விபத்து
28-Jul-2025
வத்தலக்குண்டு : - அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஸ்வாதன் பேசியபோது தொண்டர்கள் பிரியாணி சாப்பிட சென்றதோடு ,எம்.எல்.ஏ., நிர்வாகி பெயரை குறிப்பிட தவறியதால் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. நிலக்கோட்டை தொகுதிக்குட்பட்ட வத்தலக்குண்டில் மேற்கு, கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. நிலக்கோட்டை எம். எல். ஏ., தேன்மொழி சேகர், வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர்கள் அன்ன களஞ்சியம், சுதாகர், நகர செயலாளர் பீர் முகமது, மாசாணம் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் வரவேற்று பேசிய தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ., வத்தலக்குண்டு மேற்கு ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன் பெயரை வாசிக்க தவறியதால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மேடையிலே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் பேசும்போது அ.தி.மு.க., தொண்டர்களுக்கு பிரியாணி மணம் வீசியதால் அவரது பேச்சை கேட்காமல் உணவு அறைக்குள் தொண்டர்கள் முண்டியடித்து சென்றனர். அப்போது தொண்டர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை கவனித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உணவு அறை கதவை மூட கூற தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. காலை 11:00 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் மதியம் 1:00 மணிக்கு மேல் வந்ததால் பசி தாங்காமல் பிரியாணி அறைக்குள் சென்றதாக தொண்டர்கள் கூறினர்.
28-Jul-2025