உள்ளூர் செய்திகள்

கடைக்கு தீவைப்பு

வடமதுரை: வடமதுரை வேல்வார்கோட்டை பிரிவு அருகில் இருக்கும் முத்தனாங்கோட்டை பிரபாகரன் இடத்தில் ரத்தினசாமி தென்னம்மட்டை கூரையுடன் மரப்பெட்டியில் டீக்கடை நடத்தி வந்தார். ரத்தினசாமி இறந்த நிலையில் கடை பூட்டியே இருந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அடையாளம் தெரியாதவர்கள் வைத்த தீயில் கடை எரிந்தது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !