உதவி பேராசிரியர் போக்சோவில் கைது
சாணார்பட்டி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர் சரண், 31, கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் சரண். தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர். இவர், எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயது சிறுமியிடம் அக்., 19ல் ஆசைவார்த்தை கூறி, பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமியின் பெற்றோர், சாணார்பட்டி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். விசாரித்த இன்ஸ்பெக்டர் சத்யபிரபா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, சரணை நேற்று கைது செய்தார். கைது செய்யப்பட்ட சரணுக்கு திருமணமாகி, ஆறு மாதங்களே ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.