வரத்தின்றி குறையும் ஆத்துார் நீர்த்தேக்கம்
ஆத்துார்: ஆத்துார் நீர்த்தேக்க நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத சூழலில் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கான தண்ணீர் வரத்து குறைந்து நீர்மட்டமும் குறைந்து வருகிறது.மாவட்டத்தின் பிற பகுதிகளில் தொடர்ந்த மழையால் வரத்து நீர் அதிகரிக்க ஆகஸ்டில் நீர் தேக்கம் நிறைந்து நீர் மறுகால் சென்றது. தற்போது சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் காமராஜர் நீர்த்தேக்க நீர்பிடிப்பு பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை இல்லை. வாய்க்காலில வரத்துநீரின் அளவு குறைய துவங்கியது. கூழையாறு, சிற்றாறுகளின் நீர்வரத்தும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. இதையடுத்து நீர்தேக்க நீர்மட்டம் சில நாட்களாக குறைந்து வருகிறது.2 வாரங்களுக்கு முன் 23.9 அடியாக ( 24 அடி) இருந்த நீர்மட்டம் குறைந்து நேற்று 22 அடியாக இருந்தது.--