உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஏ.டி.எம்.,மிற்கு கொண்டு சென்ற பணம் கொள்ளை; சிறுவன் உள்பட 4 பேர் கைது

ஏ.டி.எம்.,மிற்கு கொண்டு சென்ற பணம் கொள்ளை; சிறுவன் உள்பட 4 பேர் கைது

செம்பட்டி; செம்பட்டி அருகே ஏ.டி.எம்.,ல் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட பணத்தை கொள்ளையடித்த வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.வத்தலகுண்டு அருகே விருவீடு கிராமத்தை சேர்ந்தவர் நாகார்ஜுன் 30. 15 ஆண்டுகளாக, தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் வசித்து வருகிறார். தனியார் ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்பும் ஏஜன்சி நடத்தி வரும் தேவதானப்பட்டி முருகனிடம், சில ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.ஜூன் 13ல் சின்னாளபட்டியில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் நிரப்ப ரூ.29 லட்சம் ரூபாயை தனது இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றார். புதுகோடாங்கிபட்டி டாஸ்மாக் கடை அருகே 3 பேர் வழிமறித்து பணத்தை பறித்து தப்பினர். ஏஜன்சி உரிமையாளர் முருகன் புகாரில், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரித்தனர்.மர்ம கும்பல் பயன்படுத்திய இருசக்கர வாகன பதிவு எண், தேவதானப்பட்டியை சேர்ந்தது என்ற தகவல் அடிப்படையில் துப்பு துலங்கினர். தேவதானப்பட்டி சுரேந்தர் 25, முகமது இத்ரீஸ் 21, பிரீத்திவ் 19, மற்றொரு 17 வயது சிறுவன் ஆகியோரை, நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரிடம் விசாரணை தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை