தி.மு.க., பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்
வடமதுரை: அய்யலுார் புத்துார் ரோட்டில் இருந்து கொன்னையம்பட்டிக்கு செல்லும் ரோட்டில் வரட்டாறு குறுக்கிடுகிறது. அருகிலுள்ள புத்துார் மலைகளில் கனமழை பெய்யும் போது அடுத்த சில மணி நேரங்களில் வரட்டாற்றில் நீர் வரத்து ஏற்படும். 2005, 2007, 2008 ல் கனமழை பெய்து நீர்வரத்து ஏற்பட்டு இப்பகுதி மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். தற்போதைய பாதை தனியார் இடம் என்பதால் பாலம் கட்ட முடியவில்லை. இங்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் பாலம் கட்ட தினமலர் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக அரசு புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து தற்போது ரூ.ஒரு கோடியில் பாலம் கட்ட பணியை துவக்கியது. புதிய தடத்தில் பாதை, பாலம் அமைவதால் சிலரது ஆக்கிரமிப்பு அரசு இடங்கள் கைவிட்டு போகும் நிலை உள்ளது. இதில் ஆத்திரமடைந்த சின்னப்பன் கவுன்சிலர் தனபாக்கியம் வீட்டிற்கு சென்று தாக்கினார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.