உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழிக்குப்பழியாக தொழிலாளியை கடத்தி கொல்ல முயற்சி: 3 பேர் கைது

பழிக்குப்பழியாக தொழிலாளியை கடத்தி கொல்ல முயற்சி: 3 பேர் கைது

திண்டுக்கல்,:நண்பன் இறப்புக்கு பழிக்குப்பழியாக சிற்பக்கலைக்கூட தொழிலாளியை டூவீலரில் கடத்தி கொலை செய்ய முயன்ற 3 பேரை திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பாலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சிற்பகலைக்கூட தொழிலாளி விஜயன் 22. நண்பர்கள் சுப்புராம்பட்டறை துளசிமணி 24, ராஜக்கப்பட்டி கண்ணன் 20, பெரியக்கோட்டை சதீஷ் 26, மோகன்ராஜ். இவர்கள் 2024ல் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திற்கு வேலைக்கு சென்றனர். அங்கு மதுக்குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் மோகன்ராஜை விஜயன் கொலை செய்தார். ஜாமினில் வந்த விஜயன் திண்டுக்கல் - சின்னாளப்பட்டி ரோட்டில் உள்ள சிற்பகலைக்கூடத்தில் பணிபுரிகிறார். மோகன்ராஜ் கொலைக்கு பழிக்குபழியாக துளசிமணி, கண்ணன், சதீஷ் மூவரும் விஜயனை கொலைசெய்ய நோட்டமிட்டனர். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நின்ற விஜயனை டூவீலரில் வந்த மூவரும் தாக்கினர். அவர்களிடமிருந்து தப்பித்து ஏ.எம்.சி., ரோடு வழியாக ஓடினார். பின்தொடர்ந்தபடி வந்து டூவீலரில் கடத்தினர். ரயில்வே ஸ்டேஷன் வழியாக சென்றபோது துளசிமணிக்கு போனில் அழைப்பு வர அலைபேசியை எடுத்த போது விஜயன் தட்டிவிட்டார். ரோட்டில் விழுந்த அலைபேசியை எடுக்க டூவீலர் வேகத்தை குறைத்தபோது தப்பிய விஜயன் ரயில்வே போலீசாரிடம் தஞ்சமடைந்தார். வடக்கு போலீசார் மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை