மேலும் செய்திகள்
பேரூராட்சி தலைவருக்கு சேவை சான்று
29-Jan-2026
நத்தம்: நத்தம் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் போலீசார் வருவதை அறிந்து தப்பினர். வீமாஸ்நகர் பகுதி டாஸ்மாக் கடையில் இரவு பணியாளர்கள் வசூல் பணம் ரூ.3.58 லட்சத்தை கடையில் வைத்து விட்டு பூட்டி சென்றனர். நள்ளிரவில் முகமூடி அணிந்த இருவர் கடையின் சுவரை உடைத்து கொண்டிருந்தனர். இதை பார்த்த காவலாளிகள் கடை விற்பனையாளர் சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர். நத்தம் -எஸ்.ஐ., மலைச்சாமி உள்ளிட்ட போலீசார் வருவதை அறிந்த கொள்ளையர்கள் டூவீலரை விட்டு விட்டு தப்பினர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Jan-2026