கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
பழநி: பழநி -தாராபுரம் சாலையில் சத்யா நகர் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதி மேம்பாலத்தை விரைந்து முடிக்க கோரி மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பழநியில்நடைபெற்றது. மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் மாவட்ட செயலாளர் வெங்கடசுப்பிரமணியன் ,நகரச் செயலாளர் ஈஸ்வரன், ரயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் நாகேஸ்வரன் கலந்து கொண்டனர்.