உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளி சிறார்கள் வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்து 10 பேர் காயம்

பள்ளி சிறார்கள் வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்து 10 பேர் காயம்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அரசு உதவி பெறும் தனியார் தொடக்க பள்ளியில் கட்டக்காமன்பட்டியை சேர்ந்த பள்ளி சிறார்கள் பத்துக்கு மேற்பட்டோர் பள்ளி முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பினர். பெரியகுளம் ரோடு பயணியர் விடுதி அருகே வந்த போது ஆட்டோ ரோட்டில் கவிழ்ந்தது. பயணித்த சிறார்கள் அனைவரும் காயமடைந்தனர். வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர். ஆட்டோக்களில் அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி வரும் ஆட்டோக்களால் இது போன்ற விபத்துக்கள் நடப்பதால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை