பர்சை மீட்டு தந்த ஆட்டோ டிரைவர்
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு சென்னையை சேர்ந்த திவ்யா 37, சுவாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்தார். அய்யம்புள்ளி சாலையில் வரும்போது பர்சை தவற விட்டார். கண்டெடுத்த ஆட்டோ டிரைவர் ராம்குமார் 30, அதில் தனியார் வங்கி ஏ.டி.எம்., கார்டு, பணம் இருந்தது. அதனை வங்கியில் ஒப்படைத்தார். வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம்., கார்டு விபரம் படி பர்சை தொலைத்த பெண்ணிடம் வழங்கினர். ஆட்டோ டிரைவரை பலரும் பாராட்டினர்.