மேலும் செய்திகள்
வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்
17-Feb-2026
திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே திண்டுக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நலவாரியம் மூலம் ரூ.4 லட்சம் வழங்க வேண்டும். நலவாரிய நிதியை பயன்படுத்தி அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் இ.எஸ்.ஐ., மருத்துவ காப்பீடு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு., ) பொதுச் செயலாளர் சிவாஜி , சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் பாண்டியன், மாவட்டத் தலைவர் பாலசந்திரபோஸ், சம்மேளன மாநிலக்குழு உறுப்பினர் பொன்ராஜ் பேசினர். மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.
17-Feb-2026