மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா
16-Jul-2025
செம்பட்டி: எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் ஆராய்ச்சி பிரிவு, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் காமராஜர் விருது வழங்கும் விழா நடந்தது. பொறுப்பு தலைமை ஆசிரியர் குமரேசன் தலைமை வகித்தார். பேச்சு, கவிதை, ஓவிய போட்டிகள் நடந்தது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் லியோன் வினோத்குமார் விருது வழங்கி பாராட்டினார். மாவட்ட தலைவர் கண்ணன் பேசினார். 'சி' அறக்கட்டளை நிர்வாகி அழகர்சாமி, ஏகம் அறக்கட்டளை மாவட்ட தலைவர் மகாதேவன் முன்னிலை வகித்தனர்.
16-Jul-2025