மேலும் செய்திகள்
தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்
15-Oct-2025
வேடசந்துார்: வேடசந்துார் வட்டார நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பு நலச்சங்கம், வேடசந்தூர் தீயணைப்பு நிலையம், போக்குவரத்து போலீசார் இணைந்து தீபாவளி திருநாளில் பட்டாசு விபத்துகள் இன்றி மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு பிரசுரம், பள்ளி மாணவிகள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நுகர்வோர் அமைப்பின் கவுரவத் தலைவர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி வரவேற்றார். போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் சந்திரன், தர்மேந்திரன், தீயணைப்பு நிலைய அலுவலர் சேது ராமன், நுகர்வோர் அமைப்பை சேர்ந்த பொம்முசாமி, விஜயராஜா, தண்டபாணி, முருகன், மகேஸ்வரன் பங்கேற்றனர்.
15-Oct-2025