உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விழிப்புணர்வு மாரத்தான்

விழிப்புணர்வு மாரத்தான்

ஒட்டன்சத்திரம்: உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரத்தில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன் துவக்கி வைத்தனர். ஒட்டன்சத்திரம் நகரை சுற்றிலும் 5 கி.மீ., துாரத்திற்கு மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு வயதினர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர்கள் ஆசைத்தம்பி, சக்திவேல், சரண்யா, ரகுராமன், பட்ஸ் பள்ளி தாளாளர் பொன்கார்த்திக் பரிசு, சான்றிதழ்களை வழங்கினர். ரோகேஷ், சுரேஷ்குமார் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !