விழிப்புணர்வு ஊர்வலம்..
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் லியோனார்டு மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு கருத்தரங்கம், கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இலவசமாக மார்பக புற்றுநோய் பரிசோதனையும் நடந்தது. டாக்டர் ஜாக்குலின் பேரணியை துவக்கி வைத்தார். நர்சிங் கல்லுாரி மாணவிகள், கிராமப்புற பெண்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.