உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆயக்குடி சோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

ஆயக்குடி சோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

ஆயக்குடி: பழநி முருகன் கோயிலின் உப கோயிலான ஆயக்குடி சோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பல நுாற்றாண்டு பழமையான இக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் நவ. 2, காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் அனுமதி பெறுதல் நடைபெற்றது. மாலை 4:00 மணிக்கு முதல் கால வேள்வி துவங்கியது. இரண்டாம் கால வேள்வி நேற்று (நவ. 3) அதிகாலை 4:00 மணிக்கு துவங்கியது. 7:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அமிர்தலிங்க குருக்கள், செல்வ சுப்பிரமணிய குருக்கள் குழுவினர் நடத்தினர். அதன் பின் சோழீஸ்வரர் சுந்தரவல்லி மூலவர்களுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடை பெற்றது. அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், ,துணை கமிஷனர் வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை