உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆயுஷ் மருந்துகள் விழிப்புணர்வு கூட்டம் 

ஆயுஷ் மருந்துகள் விழிப்புணர்வு கூட்டம் 

திண்டுக்கல்: தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு சிறப்பு சித்த மருத்துவ முகாம், ஆயுஷ் மருந்துகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்த இதை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் (பொறுப்பு) ராஜவேல் துவங்கி வைத்தார். அரசு மருத்துவமனை மருத்துவர் பேச்சி தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவர்கள் ஜெயச்சந்திரன், பாலமுருகன், செவிலியர் மாரியம்மாள், மருத்துவமனை பணியாளர்கள் ரேகா, சந்தானம் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை ,நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு துறை மருத்துவர் ஜெயச்சந்திரன் , இளநிலை ஆராய்ச்சியாளர் பாலமுருகன் பேசினர். ஏற்பாடுகளை நகர சுகாதார ஆய்வாளர் சுப்பையா செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை