அய்யலுார் பேரூராட்சி கூட்டம்
வடமதுரை: அய்யலுார் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் கருப்பன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் அன்னலட்சுமி முன்னிலை வகித்தார். ஏ.கோம்பை வேலு கோயில் அருகில் இருக்கும் ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் தொட்டி வைத்தல், தொட்டியூர், தீத்தாகிழவனுார், பஞ்சந்தாங்கிபுதுார் கருவார்பட்டி பகுதியில் பழுதான குடிநீர் தொட்டிகளுக்கு பதிலாக புதியன வைப்பது என தீர்மானிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர் அல்லிமுத்து நன்றி கூறினார்.