உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சட்டக்கல்லுாரியில் பூப்பந்து போட்டி

சட்டக்கல்லுாரியில் பூப்பந்து போட்டி

திண்டுக்கல் : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலை இருபாலருக்கான பூப்பந்து,இறகுப்பந்துபோட்டிகளும்,கல்லுாரிகளுக்கு ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியும் திண்டுக்கல் ஜி.டி.என் சட்டக்கல்லுாரியில் நடந்தது.ஜி.டி.என். சட்டக்கல்லுாரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். சட்டக்கல்லுாரி தலைவர் டாக்டர் ரெத்தினம் தலைமை வகித்தார். டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலை உடற்கல்வி இயக்குனர் பரமசிவம் முன்னிலை வகித்தார். கல்லுாரி இயக்குநர் துரை ரெத்தினம் துவங்கி வைத்தார். ஆண்களுக்கான கிரிக்கெட்டில் சேலம் மத்திய சட்டக்கல்லுாரி முதலிடம் , திருச்சி அரசு சட்டக்கல்லுாரி 2ம் இடம், ,பெண்களுக்கான இறகுப்பந்தில் சேலம் மத்திய சட்டக்கல்லுாரி முதலிடம் , திருநெல்வேலி அரசு சட்டக்கல்லுாரி 2ம் இடம், ஆண்களுக்கான இறகுப்பந்தில் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லுாரி முதலிடம் , சேலம் மத்திய சட்டக்கல்லுாரி 2ம் இடம் ,பெண்களுக்கான பூப்பந்த்தில் திருச்சி அரசு சட்டக்கல்லுாரி முதலிடம் , மதுரை அரசு சட்டக்கல்லுாரி 2ம் இடம் ,ஆண்களுக்கான பூப்பந்தில் மதுரை அரசு அரசு சட்டக்கல்லுாரி முதலிடம் , திருச்சி அரசு சட்டக்கல்லுாரி 2ம் இடம் பெற்றது. ஜி.டி.என். சட்டக்கல்லுாரி தலைவர் டாக்டர் ரெத்தினம், முதல்வர் சீனிவாசன், பல்கலை உடற்கல்வி இயக்குனர் பரமசிவம், இயக்குநர் துரை ரெத்தினம்,கல்லுாரி பதிவாளர் சின்னகாளை பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை