உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை பார்களில் தடை பிளாஸ்டிக் தாராளம்

கொடை பார்களில் தடை பிளாஸ்டிக் தாராளம்

கொடைக்கானல் : கொடைக்கானல் டாஸ்மாக் பார்களில் தடைபிளாஸ்டிக் பயன்பாடுகள் தாராளமாக உள்ளது. இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.கொடைக்கானலில் 14 வகை நெகிழிப் பைகள், 5 லிட்டருக்கு குறைவான வாட்டர் பாட்டில், குளிர்பானங்கள் விற்பனை செய்யதடைஉள்ளது.இதைஇங்குள்ள வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் கடைபிடிக்கின்றன.ஆனால்டாஸ்மாக் பாரில் தடை செய்யப்பட்ட குளிர்பானங்கள், வாட்டர் பாட்டில்,பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவை தாராளமான பயன்பாட்டில் உள்ளது. இதுகுறித்து வர்த்தகர்கள் புகார் தெரிவித்த நிலையில் நகராட்சி,உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்மவுனம் காக்கின்றனர்.தடைபிளாஸ்டிக் பயன்பாட்டை பார்களில் நடைமுறைப்படுத்துவது சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழி ஏற்படுத்தும். இவ்விஷயத்தில் நகராட்சி,உணவு பாதுகாப்பு துறையினர் கடுமை காட்ட வேண்டும்.கொடைக்கானல், நகர் நல அலுவலர்,தினேஷ்குமார் கூறுகையில்,''கொடைக்கானல் நகராட்சி பகுதியில் செயல்படும் பார்களில் 5 லிட்டருக்கு குறைவான வாட்டர்பாட்டில்,குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததையடுத்து ஆய்வு செய்துஅபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை