உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாழைக்கன்று நடும் போராட்டம்

வாழைக்கன்று நடும் போராட்டம்

நத்தம்: நத்தம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவில்பட்டி வழியாக பள்ளபட்டி விலக்கு வரை உள்ள தார்சாலை சேதமடைந்து உள்ளது.வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை உருவாகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்து நத்தம் பஸ்ஸ்டாண்ட் முன்பு உள்ள சேதமடைந்த சாலையில் மார்க்சிஸ்ட் சார்பில் வாழைக்கன்று நடும் போராட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் குழந்தைவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பெருமாள், சின்னக்கருப்பன், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ