உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  யானைக்கூட்டத்தால் வாழைகள் சேதம்

 யானைக்கூட்டத்தால் வாழைகள் சேதம்

கன்னிவாடி: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனப்பகுதியில் 2 வாரங்களுக்கு மேலாக நீலமலைக்கோட்டை, பண்ணைப்பட்டி, நாயோடை நீர்த்தேக்கம் பகுதிகளில் யானைகள் சாகுபடியை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தருமத்துப்பட்டி அருகே கோம்பையில் மலையடிவார நிலத்தில் ஒரு குட்டி உட்பட 3 யானைகள் கொண்ட கூட்டம் புகுந்தது. தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. வனத்துறை அலட்சியத்தால் யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்புவதில் தாமதம் நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது. விவசாயிகள் கூறுகையில் 'வனத்துறையினர் பெயரளவில் அவ்வப்போது புகைமூட்டம் எழுப்புவதாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் போட்டோ எடுத்து கொள்கின்றனர். உயரதிகாரிகள் நேரடி ஆய்வு தவிர்ப்பதால் இப்பணிகளை முழுமையாக கண்காணிப்பதில்லை. யானைக்கூட்டத்தை வனத்திற்குள் அனுப்புவதில் தொய்வால் மலைக்கிராம மக்கள் அச்சத்துடன் நடமாடும் அவலம் நீடிக்கிறது ' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ