உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயிலுக்கு பேட்டரி பஸ்

பழநி கோயிலுக்கு பேட்டரி பஸ்

பழநி,: பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகத்திடம் மேலும் ஒரு பேட்டரி பஸ் ஒப்படைக்கப்பட்டது. பழநி கிரிவீதியில் நீதிமன்ற உத்திரவின்படி தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்கள், கிரிவீதி வின்ச் ஸ்டேஷன், ரோப்கார் ஸ்டேஷன், சுற்றுலா பேருந்து நிலையம் ஆகியவற்றிற்கு பக்தர்கள் செல்ல இலவசமாக கோயில் நிர்வாகம் சார்பில் பேட்டரி கார், பேட்டரி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 11 பேர் அமரக் கூடிய 18 பேட்டரி கார், 14 பேர் அமரக்கூடிய பேட்டரி மினி பஸ் 1, 23 பேர் அமரக்கூடிய 17 பேட்டரி பஸ் என 36 வாகனங்கள் இயக்கி வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் நாகா லிமிடெட் நிறுவனம் சார்பில் குழும தலைவர் கமலக்கண்ணன் 23 பேர் அமரக்கூடிய எலக்ட்ரிக் பஸ்சை கோயில் இணைக்கமிஷனர் மாரிமுத்துவிடம் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து தற்போது கிரி வீதியில் கோயில் சார்பில் 37 மின் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை