வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஓசி ல கழிப்பறை வேணும்னா இப்புடித்தான் இருக்கும். வீட்டிலேயே போய்ட்டு கிளம்புங்க. வழில எங்கும் கண்டதை வாங்கி சாப்புடாதீங்க. எதுக்கும் கேரண்டி இல்லை.
ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுக்கழிப்பறைகளை சுத்தமாக பராமரிப்பதில் உள்ளாட்சி அமைப்புகள் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் நகரங்கள் , கிராம பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிடம் பழக்கம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. மத்திய மாநில அரசுகள் எத்தனை திட்டங்கள் கொண்டு வந்தாலும் திறந்த வெளி பழக்கத்தை இன்னும் ஒழிக்க முடியவில்லை. விழிப்புணர்வு இல்லாதது ஒருபுறம் இருக்க சுகாதார வளாகம் சுகாதாரமின்றி இருப்பது முக்கிய காரணியாக உள்ளது. தொடரும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாவட்டத்தில் மாநகராட்சி, மூன்று நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 306 ஊராட்சிகள் உள்ளன. மத்திய அரசின் ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் இட வசதி உள்ளவர்களுக்கு தனிநபர் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தனி நபர் கழிப்பறை கட்ட வசதி இல்லாத வீடுகளுக்கு பொது கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இன்னும் பல உள்ளாட்சி அமைப்புகளில் தேவையான இடங்களில் சமுதாய சுகாதார வளாகங்கள் அமைக்க வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களில் இதற்கான இடம் இல்லாததால் கட்டப்படாமல் உள்ளது. தனிநபர் கழிப்பறை , சமுதாய சுகாதார வளாகங்கள் இல்லாத பகுதிகள், சுகாதாரமற்ற, பராமரிப்பபு இல்லாத கழிப்பறைகளில் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். பொது கழிப்பறையில் தண்ணீர் பற்றாக்குறை, சுத்தமின்மை காரணங்களால் இவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து திறந்தவெளியை நாடுகின்றனர். இவற்றை முறையாக பராமரிக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேவையான இடங்களில் பொது கழிப்பறைகளை கட்டித் தரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். .............. போதிய பராமரிப்பு அவசியம் தனிநபர் கழிப்பறை இல்லாதவர்கள் மட்டுமே பொதுக் கழிப்பறையை பயன்படுத்துகின்றனர். ஆனால் பொது கழிப்பறைகள் பராமரிப்பின்றி சுத்தம் இன்றி உள்ளன. இதனால் இவற்றை பயன்படுத்த பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர். கழிப்பறைக்கு 24 மணி நேரமும் தண்ணீர் இருக்கும் வகையில் வசதி செய்து தர வேண்டும். பொது கழிப்பறைகளை பராமரிப்பு செய்ய மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பல பகுதிகளில் சாலை ஓரங்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுவதால் ரோட்டின் வழியாக பயணம் செய்யும் போது துர்நாற்றம் வீசுகிறது. அடிப்படை தேவைகளில் ஒன்றான கழிப்பறை வசதியை அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் போதுமான தண்ணீர் வசதி உட்பட தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். -- ருத்திர மூர்த்தி, பா.ஜ., மாவட்ட செயலாளர், ஒட்டன்சத்திரம். ................... - ...
ஓசி ல கழிப்பறை வேணும்னா இப்புடித்தான் இருக்கும். வீட்டிலேயே போய்ட்டு கிளம்புங்க. வழில எங்கும் கண்டதை வாங்கி சாப்புடாதீங்க. எதுக்கும் கேரண்டி இல்லை.