உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வரத்து அதிகரிப்பால் விலை குறைந்த பீன்ஸ்

வரத்து அதிகரிப்பால் விலை குறைந்த பீன்ஸ்

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பீன்ஸ் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்து கிலோ ரூ.13 க்கு விற்றது.ஒட்டன்சத்திரம் மலைப்பகுதி கிராமங்களான வடகாடு, கண்ணனுார், கோம்பைபட்டி, பெத்தேல்புரம் சுற்றிய கிராம பகுதிகளில் பீன்ஸ் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. பல இடங்களில் அறுவடை மும்முரமாக இருப்பதால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்துள்ளது. இதையொட்டி இதன் விலை சரிவடைந்து கிலோ ரூ.13 க்கு விற்பனையானது. சென்ற வாரம் வரத்து குறைவாக இருந்ததால் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.30 க்கு விற்பனை ஆன நிலையில் தற்போது விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை