உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அவரைக்காய் விலை 4 மடங்கு அதிகரிப்பு

அவரைக்காய் விலை 4 மடங்கு அதிகரிப்பு

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, வடகாடு கண்ணனுார் பகுதிகளில் அவரைக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது. பல இடங்களில் அறுவடை நடப்பதால் வரத்து அதிகரித்திருந்தது.சமீபத்தில் பெய்த மழையால் அவரைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டது. தரம் குறைந்த காய்கள் அதிகமாக இருந்தன. இதனால் மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது.கடந்த வாரம் கிலோ, 10 ரூபாய்க்கு விற்ற அவரைக்காய் நேற்று முன்தினம் கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி