ஏன் இந்த சுணக்கம் n மழை காலங்களில் தகவல் தொடர்பில் சிக்கல் n தடையின்றி கிடைக்க தேவை கூடுதல் கவனம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. ஏற்கனவே பெய்த மழையால் தகவல் தொடர்பு சாதனங்கள் பழுதடைந்ததால் நகர் பகுதியில் தவிர்த்து கிராமங்கள், மலைப் பகுதிகளில் அலைபேசி இணைப்பு ,இணையதள வசதி கிடைப்பது அரிதாக இருந்தது. அரசு அலுவலகங்களில் அதன் சர்வர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டன. இதனால் பத்திரப்பதிவு ,தாலுகா ,போக்குவரத்து துறை உள்ளிட்ட அலுவலகங்களில் சர்வர் இணைப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு பணிகள் தேக்கம் அடைந்தன.தகவல் தொழில்நுட்பத்தில் நாடே முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்க இயற்கை இடர்பாடுகளால் தகவல் பரிமாற்றத்தில் தேக்கம் ஏற்பட்டு வருகிறது. தனியார் சேவை நிறுவனங்கள் சில 5 ஜி சேவை அளித்து வருவதாக விளம்பரப்படுத்தி வந்தாலும் கிராமங்களில் 5ஜி சேவை என்பது அரிதாக உள்ளது. 5ஜி அலை வரிசை கிடைக்காத பகுதிகளில் அலைபேசி கோபுரங்களை தரம் உயர்த்தவும் கிராமங்களுக்கும் இணையதள வசதி, அலைபேசி இணைப்பு வசதிகளை அதிகப்படுத்தவும் பி.எஸ்.என்.எல்., தனியார் சேவை நிறுவனங்கள் முன் வர வேண்டும்.