உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வரத்து குறைவால் விலை உயர்ந்த பீட்ரூட்

வரத்து குறைவால் விலை உயர்ந்த பீட்ரூட்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம், காளாஞ்சிபட்டி, பாவாயூர், காவேரியம்மாபட்டி, அத்தப்பகவுண்டனுார், பெரிய கோட்டை சுற்றிய பகுதிகளில் பீட்ரூட் அதிகமாக பயிரிடப்படுகிறது. பல பகுதிகளில் பீட்ரூட்டை அறுவடை செய்யும் பணிகள் முடியும் நிலையில் உள்ளதால் மார்க்கெட்டிற்கு வரத்து மிகவும் குறைந்து விட்டது.சில நாட்களுக்கு முன்பு தரமான பீட்ரூட் கிலோ ரூ.7க்கு மட்டுமே விற்பனையானது. பீட்ரூட் பறித்தெடுக்க ஒரு நாள் கூலியாக ஒரு நபருக்கு ரூ.350க்கு மேல் கொடுக்கப்பட்டது. இத்துடன் உரம், பூச்சி மருந்து பராமரிப்பு என பீட்ரூட்டை அறுவடை செய்ய செலவு இன்னும் அதிகரித்தது. காய்கறி மார்க்கெட்டில் கமிஷனும் கொடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் விலையானது விவசாயிகளுக்கு கட்டுபடியாகவில்லை. பீட்ரூட் ஒரு கிலோ ரூ.30க்கு மேல் விற்றால்தான் கட்டுபடியாகும் என விவசாயிகள் தெரிவித்திருந்தனர். இந் நிலையில் விளைச்சல் இல்லாத நேரத்தில் பீட்ரூட் விலை அதிகரித்து கிலோ ரூ.40க்கு விற்பனை ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை