உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் பா.ஜ.,வினர் தேசியக்கொடி ஊர்வலம்

பழநியில் பா.ஜ.,வினர் தேசியக்கொடி ஊர்வலம்

பழநி: 'ஆப்பரேஷன் சிந்தூர்' மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவ நடவடிக்கையை பாராட்டி, பிரதமர் மோடியை வாழ்த்தி பா.ஜ., சார்பில் தேசியக் கொடி ஊர்வலம் பழநியில் நடைபெற்றது.மாவட்ட முன்னாள் தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். பழநி நேதாஜி சிலை அருகே துவங்கிய ஊர்வலம் பெரிய கடை வீதி, காந்தி மார்க்கெட் ரோடு, வேல், மயில் ரவுண்டானாக்களின் வழியாக பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் 500 மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியை பா.ஜ.,வினர் எடுத்து வந்தனர். தமிழ்நாடு பிராமண ஸமாஜ மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்தய்யர் இதில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். மாவட்டத் தலைவர் ஜெயராமன், பொதுச்செயலாளர் செந்தில்குமார், தேசிய பொதுக்குழு உறுப்பினர் திருமலைசாமி, மாவட்ட பொருளாளர் ஆனந்த், மதுணைத் தலைவர் ரஞ்சிதம், செயலாளர் ஸ்ரீதர், நகர தலைவர் ஆனந்தகுமார், ஒன்றிய தலைவர்கள் பிரகாஷ், கவிதா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை