உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அம்ரித் பாரத் ரயிலுக்கு பா.ஜ.,வினர் வரவேற்பு

 அம்ரித் பாரத் ரயிலுக்கு பா.ஜ.,வினர் வரவேற்பு

திண்டுக்கல்: தென்னக ரயில்வே சார்பில் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை வழியே தாம்பரம் வரை ஸ்லீப்பர் பெட்டி வசதியுடன் புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10:40 மணிக்கு புறப்பட்ட ரயில் மாலை 4:50 மணிக்கு திண்டுக்கல் வந்தது. அங்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மாவட்டத்தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் பொதுச் செயலாளர் முத்துகுமரன், நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். திண்டுக்கல் ரயில் நிலைய ஊழியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டு ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ