ரத்ததான முகாம்
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் நாட்டு நலப்பணி திட்டம், இளம் செஞ்சிலுவைச் சங்கம், ரெட் ரிப்பன் கிளப் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. பொறுப்பு பதிவாளர் சுந்தரமாரி துவக்கி வைத்தார்.திட்ட அலுவலர் முத்துக்குமார் வரவேற்றார். டாக்டர் சரண்யாமருதாயி பேசினார். மண்டல ஒருங்கிணைப்பாளர் தேவன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நாகமணி நன்றி கூறினார்.