புத்தக திருவிழா விழிப்புணர்வு மாரத்தான்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 12-வது புத்தக திருவிழா ஆக., 28 ல் துவங்குகிறது. இதைமுன்னிட்டு 'வாருங்கள் ஓடுவோம், வாசிப்பை நோக்கி ' எனும் தலைப்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. கலெக்டர் சரவணன் துவங்கி வைத்தார். அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எம் காலனி, எம்.வி.எம் கல்லுாரி, அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளியில் முடிந்தது. இதன் விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டத்தில் 1300க்கு மேற்பட்ட பள்ளி ,கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2ம் பரிசு ரூ.4000, 3ம் பரிசு ரூ.3000, 4ம் பரிசு ரூ.2000 ,5ம் பரிசாக ரூ.1000 , பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் சரவணன் வழங்கினார். நிகழ்ச்சியின் ஒருபகுதியாக போதைபொருட்கள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.